• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆக்ராவில் இளைஞர்கள் முகங்களை மூடி செல்லக்கூடாது – காவல்துறை உத்தரவு

May 30, 2017 தண்டோரா குழு

ஆக்ராவில் வசிக்கும் 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் பொது இடங்களில் தங்கள் முகங்களை மூடி செல்லக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் உத்தரபிரதேஷ் மாநிலத்தின் மதுரா நகரின் ஹோளி கேட் பகுதியுள்ள கொய்லாவாளி காளி என்னும் இடத்தில் விகாஸ் மற்றும் மேக் அகர்வால் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். இம்மாதம் 15ம் தேதி, 6 பேர் முகமூடி அணித்து கடைக்குள் அத்துமீறி நுழைந்து, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற விகாஸ் மற்றும் மேக் அகர்வால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேபோல், இச்சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து, பிரோசாபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் மிட்டால், பட்டபகலில் கடத்தப்பட்டார். சம்பவம் நடந்து 7 மணிநேரம் கழித்து, டுட்லா என்னும் இடத்திலுள்ள பன்சாயி கிராமத்திலிருந்து அவர் மீட்கப்பட்டார்.

இந்த இரண்டு சம்பத்திற்கு பிறகு, ஆக்ரா காவல்துறை உயர் அதிகாரிகள்,

“அதிக வெயிலாக இருந்தாலும், 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் பொது இடங்களில் தங்கள் முகங்களை மூடிகொண்டு செல்லக்கூடாது. சாலையில் தலைக்கவசம் அணிந்து நடக்கக்கூடாது.
பெண்கள் மற்றும் வயதானவர்கள், தங்கள் முகங்களை மூடி நடந்தால் பரவாயில்லை. மதுராவில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும், குற்றவாளிகள் தங்கள் முகங்களை மூடியிருந்தனர்.

திருட்டு,மற்றும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை அறுத்து செல்வது போன்ற குற்றங்களை 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் செய்து வருகின்றனர். எனவே இது போன்ற இளைஞர்களை அதிகம் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இந்த விஷயத்தில் பொது மக்களின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க