• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகாயத்தில் பிறந்த குழந்தைக்கு அற்புத சலுகை !

June 19, 2017 தண்டோரா குழு

விமான பயணத்தின் போது பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலுள்ள டமாமில் இருந்து நேற்று கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த நிறைமாதக் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார்.அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர்.அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜெட்ஏர்வேஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பார்ப்பதற்கான பாஸ் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க