• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது – முரளிதர ராவ்

March 30, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம் என பாஜக தமிழக பொறுப்பாளரும் , தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக தமிழக பொறுப்பாளரும் , தேசிய பொதுசெயலாளருமான முரளிதர ராவ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ” பாஜக இந்திய முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது எங்கள் நோக்கம். எங்கள் இலட்சியம். திமுக-காங்கிரஸ் எக்காரணத்தை கொண்டும் ஆட்சியமைக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக தலைமையிலான பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும். 2014 -ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணியும் தலைவர்களும் எந்தவொரு கொள்கையும், தலைமையையும் முன்னிறுத்தாமல் இருக்கிறார்கள். தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க