• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு களத்தில் டிடிவி தினகரன்

March 15, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் மற்றும் அ.தி.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார்கள் என அக்கட்சிகளின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு காலியாக இருந்து வந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளன. இதன் காரணமாக ஆர்.கே. நகர் தொகுதியில் பலமுனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க