• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடனடியாக நடைபெறும் – ஹெச் ராஜா

August 17, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் உடனடியாக இணையும் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், நினைவு இல்லம் ஆக்கப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அதில், மன்னார்குடி குடும்பத்தினரை வெளியேற்றுவது மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைத்த இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவிட்டார். ஆகையால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடனடியாக நடைபெறும் என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க