• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவிநாசி ரோட்டிலுள்ள மேம்பாலத்திற்கு கீழ் சாக்கடை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

October 20, 2020 தண்டோரா குழு

மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன் ஹால், ஆத்துப்பாலம், பந்தய சாலை, ரயில் நிலையம், காந்திபுரம், ராமநாதபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கன மழை பெய்தததால் வெள்ளம் சாலைகளில் சாக்கடைகளில் கலந்து ஆறு போல ஓடுகிறது. அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு கீழே சாக்கடையோடு சேர்ந்து மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல பணிகளில் நடைபெற்று வந்தாலும், ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, சாக்கடை நீர் சாலைகளில் ஆறை ஓடுவதை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க