• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழுத குழந்தைக்கு பால் கொடுத்த பெண் காவலர் !

January 1, 2019 தண்டோரா குழு

ஐதராபாத்தில் பாலுக்காக அழுத கைக்குழந்தைக்கு பால் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவமனை அருகே இரண்டு மாதக் கைகுழந்தை ஒன்றை அதன் தாயார் சபானா பேகம் இர்ஃபான் என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது சபானா முழுபோதையில் இருந்துள்ளார். தான் தண்ணீர் குடித்துவிட்டு வரும்வரை குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு இர்ஃபானை கேட்டுக்கொண்டார். இர்ஃபானும் குழந்தையை பெற்று கொண்டு காத்திருந்தார். எனினும், பல மணிநேரம் ஆகியும் சபானா வரவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். பின்பு பால் இல்லாததால் குழந்தை அழுக தொடங்கியது. குழந்தை அழுவதை கண்டு இர்ஃபான் புட்டிப்பால் கொடுக்க முயன்றார். ஆனால் குழந்தை பாலை குடிக்காமல் தொடர்ந்து பசியில் அழுதது. உடனடியாக இர்ஃபான் குழந்தையை அருகிலிருந்த மகளிர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று நடந்ததை கூறியுள்ளார்.

பேகம்பேட் மகளிர் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கே.பிரியங்கா கைக்குழந்தைக்குத் தாயாவார். பணியில் இருந்தபடியே
காவல் நிலையத்திலேயே தன் குழந்தையையும் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ஆதரவற்ற குழந்தை பாலுக்காக அழுகின்ற தகவல் பிரியங்காவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனே டாக்ஸி பிடித்து காவல் நிலையத்துக்கு வந்த பிரியங்கா குழந்தைக்கு பால் கொடுத்தார் குழந்தையின் அழுகை நின்றது.
இதற்கிடையில் போதை தெளிந்ததும் குழந்தையின் தாய் சபானா பேகம் தன் குழந்தையை காணவில்லை என தெருவில் அழுதபடி தேடிக்கொண்டிருந்தார். அவரை காவலர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தை அவரிடம் காண்பிக்கப்பட்டது அது தன் குழந்தைதான் என பேகம் கூறினார்.இதையடுத்து போதை தெளிந்த தாயிடம் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சரியான சமயத்தில் பெண் காவலர் பிரியங்கா குழந்தைக்குப் பால் கொடுத்தது இணையத்தில் பரவலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க