• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அழுத்தம் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டாரா என்பதில் சந்தேகம் – முருகன்

September 27, 2017 தண்டோரா குழு

அரியலூர் மாணவி அனிதா அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது என எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 16ம் தேதி அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்ததாகவும் அனிதா மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் கூறினார். எஸ்பியிடம் இருந்து முழு அறிக்கை கிடைத்தவுடன் ஆதி திராவிட ஆணையத்தின் பரிந்துரைகள் தமிழக அரசிடம் அளிக்கப்படும் என்றார்.

மேலும், வெளிப்புற அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தாரா அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பதை விசாரிக்க அறிவுறுத்தியுள்ளோம் என முருகன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க