• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அல்கெமி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

November 8, 2023 தண்டோரா குழு

கோவையில் உள்ள, அல்கெமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள,அல்கெமி பப்ளிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு தின விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாக அறங்காவலர் சாந்தி தங்கவேலு,இயக்குனர் அக்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். நான்கு அணிகளாக பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.முன்னதாக பள்ளி மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.தொடர்ந்து,தடகள போட்டிகள், சிலம்பம், கராத்தே,மாஸ்டர் டிரில் மற்றும் 200 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் தமிழக அரசு பள்ளி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வருவதாக கூறிய அவர்,குறிப்பாக முதல்வர் டிராபி போன்ற போட்டிகளில் மாவட்ட, மண்டல,மாநில அளவில் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் பேசிய பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு,

மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும்,எங்களது பள்ளியில் கல்வியோடு மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்… விழாவில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள், குபள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க