• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிஞர் அண்ணாவுக்கு திமுக, அதிமுக அஞ்சலி

February 3, 2017 தண்டோரா குழு

பேரறிஞர் அண்ணாவின் 48-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் அண்ணா சிலைக்கு, திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களும் ஏராளமானோர் தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க