• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரிவாள் வெட்டில் உயிரிழந்த சோடா கடை உரிமையாளர் இறுதி ஊர்வலம்

September 14, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரத்தில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சோடா கடை உரிமையாளர் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் நேற்று வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது.அவரது உடலை காண கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை வார்டிற்கு முன் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதனால் அவரது உடலானது அங்கேயே பார்வைக்காக வைக்கப்பட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மையானத்திற்கு எடுத்து செல்ல முடிவெடுக்கபட்ட நிலையில் பிஜு வின் இறுதி ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி வைத்ததால் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க