• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரபு நாடுகளில் இருப்பது போல் இங்கேயும் கடுமையான தண்டனையை கொண்டு வரவேண்டும் – நடிகை த்ரிஷா

August 28, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, யுனிசெஃப்பின் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறை’ குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட த்ரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

“சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும், அரபு நாடுகளில் இருக்கும் உடனடி கடுமையான தண்டனையை போல இங்கேயும் கொண்டு வரவேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000, 2015ல் இது 15000 வழக்குகளாக இருந்து 2016ல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது. குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள், நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றன. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது.

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும். குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் படிக்க