• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரண்மனையில் தீ விபத்து ; 3 லட்சம் ரூபாய் எரிந்து நாசம்

May 13, 2017 தண்டோரா குழு

மைசூர் அரண்மனையின் வடக்கு பகுதியில் உள்ள வாயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஏ.டி.எம்-யில் உள்ள 3 லட்சம் ரூபாய் தீயில் எரிந்து நாசமானது.

மைசூர் திப்பு சுல்தான் அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வரஹா கேட் அருகே, ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்மில் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்தது.

இந்த தீ, அருகில் இருந்த டிக்கெட் கவுன்ட்டருக்கும் பரவி எரிந்தது. இது குறித்து அரண்மனை காவலாளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர்கள், தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த இயந்திரம், ஆவணங்கள், ஏ.டி.எம். இயந்திரம், ஏ.சி. ஆகியவை எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த ஏ.டி.எம்.யில் 3 லட்சம் ரூபாய், ஏ.டி.எம். எந்திரத்துடன் எரிந்து நாசமானது தெரியவந்துள்ளது. இது பற்றி மைசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க