• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 11, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கொரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வந்த
கொரோனா சிறப்பு வார்டில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இருமல்,
காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் மையம் அருகில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் செயல்படும் என
மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து இன்று முதல் அங்கு கொரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கியது.இதனை தொடர்ந்து அப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊழியர்களிடம் போதுமான உபகரணங்கள் உள்ளதா? என கேட்டறிந்தார். அங்கு வந்த பொதுமக்களிடம் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் ராஜா, உதவி நகர் நல அலுவலர் வசந்த்
திவாகர், மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியம்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க