• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போடும் உடைந்த ஊசி – கண்டுகொள்ளாத செவிலியர், மருத்துவர்

September 9, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போடும் உடைந்த ஊசி துண்டையும் கண்டுக்கொள்ளாத செவிலியர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு தாய் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன், மலர்விழி தம்பதினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மலர்விழி இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், 21ம் தேதி மருத்துவமனையில் தடுப்பூசி என்று குழந்தைக்கு இடது கையில் ஓர் ஊசியும், இடது தொடையில் ஓர் ஊசியும் போட்டுள்ளனர்.

இதையடுத்து, மலர்விழி 31ம் தேதி டிஸ்சார்ஜ் வீட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால்,அன்று இரவு முழுவதும் குழந்தை தொடர்ந்து அழுந்து கொண்டே இருந்துள்ளது. மறுநாள் குழந்தையின் இடது தொடையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் வீக்கம் அதிகமாகி கொண்டே வந்துள்ளது. இந்நிலையில், மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். அப்போது குழந்தையின் இடது தொடையில் ஏதோ குத்தி தேன்மொழிக்கு கையில் ரத்தம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மலர்விழி குழந்தையின் இடது தொடையில் தடுப்பூசி போட்ட இடத்தில் தடவி பார்த்த போது ஊசியின் மேல் நுனி துருத்திக்கொண்டிருந்தது. அதை எடுத்தபோது செவிலியர் ஊசிபோட்டு உடைந்த ஊசி துண்டு வந்துள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில்,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் மலர்விழி புகார் அளித்துள்ளார். அதில், தங்கள் அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமான கவனக்குறைவால் இந்த செயல் நடந்துள்ளது. ஆகவே எனது குழந்தைக்கு சரியான குழந்தைக்கு சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட செவிலியர் மற்றும் மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க