• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம்

March 30, 2018 தண்டோரா குழு

அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் இல்லையென்றால் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என  தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது.இதில் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் 15 ஆண்டு காலமாக பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,தமிழக அரசின் படிப்படியான மதுவிலக்கு அறிவிப்பால் மிகையாக உள்ள பணியாளர்களை பணி மூப்பு மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 8 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்க மாநில தலைவர்,

“மற்ற துறைகளை காட்டிலும் தமிழக அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் விளங்குவதாக சுட்டிக்காட்டினார்.இந்த சூழலில் விற்பணையாளர்களாக பணியாற்றும் தங்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் ஊக்கத்தொகையும் தற்போது வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.டாஸ்மாக் பணியாளர்கள் அவ்வப்போது தாக்கபடுவதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம்,காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதுடன்,தாங்கள் பல ஆண்டுகளாக இக்கோரிக்கைகளை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறை கூறினார்.

இதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருவதாகவும் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போரட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்”.

மேலும் படிக்க