• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மதுக்கடையில் முதல் பெண் விற்பனையாளர் நியமனம் !

October 27, 2017 தண்டோரா குழு

கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் எழுத்துத்தேர்வு மூலமே பணியமர்த்தப்படுவர்கள்.

இதற்கிடையில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட 8 பேர் தேர்வு பெற்றனர்.ஆனால் பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படவில்லை. இதையடுத்து ஷைனி உட்பட 8 பேரும் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்குமுன் தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம் அரசு பணியில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபான விற்பனை கூடத்தில் விற்பனையாளராக நேற்று பணியில் சேர்ந்தார்.மற்ற பெண்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு மதுபான விற்பனை கழகம் தொடங்கி 33 ஆண்டுகள் ஆனா நிலையில் முதல் விற்பனையாளராகஷைனி தற்போது பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க