• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்து? நீதிபதி கிருபாகரன் அரசுக்கு சரமாரி கேள்வி

June 27, 2017 தண்டோரா குழு

அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பியுள்ளார்.

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.இந்த வழக்கை இன்று நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

அப்போது, அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனையளிக்கிறது.ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது. ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது.

அரசு பள்ளியில் சேர்க்காமல் பெரும்பாலானோர் ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர்களின் வருகையை CCTV கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன்? 2012 அரசாணைப்படிஎத்தனை அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.

ஆங்கில வழி கல்வி எனில், தமிழில் பாடம் நடத்துபவர்கள் ஆங்கிலத்திலும் நடத்துவார்களா? 2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கின்றனர் எனக்கேள்வி எழுப்பி, அதற்கு 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்திரவிட்டார்.

மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க