• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

June 13, 2019 தண்டோரா குழு

கோவையில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரசு பள்ளிகளை பாதுகாத்திடுதல், நீட் தேர்வை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல் துறை தடுப்புகளை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகள் உட்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க