காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“ தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வறட்சியும், குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடும் சூழலில் அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது.
அரசு ஊழியர்கள் நோட்டீஸ் கொடுத்தும் தமிழக அரசு பேச அழைக்காதது அரசின் மோசமான அணுகுமுறை ஆகும். அரசு நிர்வாகம் எப்படிப் போனால் எங்களுக்கென்ன என்ற போக்குடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 110 விதி அறிவிப்புகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட முன்வரவில்லை. ஏற்கனவே சீர்குலைந்து கிடக்கும் அரசு நிர்வாகம் ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
அரசு ஊழியர்களுக்காக ஜெயலலிதாவின் அறிவி்ப்பை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். அரசு ஊழியர் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும்.”
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது