• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் ஒரு சாக்கடை அதில் எந்த குப்பை விழுந்தா என்ன? – மு.க. அழகிரி

February 19, 2018 தண்டோரா குழு

அரசியல் ஒரு சாக்கடை என்றும் அதில் எந்த குப்பை விழுந்தாலும் கவலையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ளே கோயில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முக அழகிரி கலந்துகொண்டார்.  அப்போது அவரை பேட்டியடுக்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி அரசியல் ஒரு சாக்கடை அதில் எந்த குப்பை விழுந்தாலும் எனக்கென்ன என்று கேட்டார்.

அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கருணாநிதி அழைத்தால் திமுகவில் இணைவேன் என்று அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க