• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியலில் விஜயகாந்த எனக்கு மூத்தவர் – கமல்

February 19, 2018 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எனக்கு மூத்தவர் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி கட்சி தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியுள்ளார்.

இதையடுத்து கமல் பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில்  நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை கமல் சந்தித்த நிலையில்,இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசியலில் எனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். விஜயகாந்தை சந்தித்து பல காலம் ஆனதால் அவரை  சந்தித்தேன். திராவிட கொள்கைகளை கூறும் தானும் சாதித்து காட்டுவேன் என்றார்.

மேலும்,நானும் அரசியல்வாதியான பிறகு தேமுதிக அலுவலகத்துக்கு வருவது பொருத்தம் தான் என கமல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க