• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியலில் இருந்து விலகுகிறேன் – என்னை துன்புறுத்த வேண்டாம்: ஜெ.தீபா

July 30, 2019 தண்டோரா குழு

நான் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன் என முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,

நான் முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்த வேண்டாம். அதேவேளையில் என்னை தொலைப்பேசியிலும் அழைக்காதீர்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். தீபா பேரவை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஜெ.தீபா அந்த பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க