• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசின் இழப்பீடு போதுமானதா? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா ? – சீமான் கேள்வி

December 5, 2019 தண்டோரா குழு

பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்த இடத்தில் சீமான் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளனர். உரிமையாளரின் வீட்டு கழிவு நீர் இங்கே சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமை சுவராக தான் நான் பார்க்கிறேன். மக்கள் சுவற்றை பற்றி சொல்லபோனால் நாயை விட்டு தூரத்தியுள்ளனர். குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டி தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். போராடியவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தோல் மேல் கைவைத்து நம்பிக்கையாக செயல்பட வேண்டும். மனித உயிர்களை விட மதில் சுவர் பெரியதா. இந்த மக்களின் முகத்தை பார்க்கக்கூடாது என சுவரை கட்டியவர்கள் உறுதியாக கட்டிருக்கனும்.

ஏற்கனவே இது குறித்து புகார்களை தெரிவித்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஏற்றதாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். அரசின் இழப்பீடு போதுமானதா? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா ? போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க முதல்வர் கணவத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இறந்தவர்கள் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க