June 1, 2020
தண்டோரா குழு
கோவையில் உள்ள அம்மா உணவகங்களை தடையின்றி செயல்படுத்தும் பொருட்டு அதிமுக சார்பில் ரூ.87 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்.எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித்சரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் செலவினங்களுக்காக அதிமுக சார்பில் ரூ.87 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். ஊரடங்கு காலத்தில் கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.