• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா ஆட்சி சூப்பர் ஆட்சி, எடப்பாடி ஆட்சி சூப்பரோ சூப்பரான ஆட்சி – சூலூர் எம்.எல்ஏ கனகராஜ்

March 9, 2019 தண்டோரா குழு

அம்மா ஆட்சி சூப்பர் ஆட்சி, எடப்பாடி ஆட்சி சூப்பரோ சூப்பரான ஆட்சி என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியுள்ளார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கோவை உக்கடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார் பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

37 எம்.பிகளால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அந்தம்மாவோட சொந்த கருத்து. தேமுதிக கட்சியை தமிழ்நாடே பார்க்கின்றது. இங்கொன்றும் அங்கொன்றும் என தேமுதிக இரு பக்கமும் பேசுகின்றது தேமுதிக இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு நாகரீகம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைக் எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். .அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் அதன் மூலம் அதிமுகவிற்க்கு ஒரு 500,1000 ஒட்டு கிடைக்கும். அது தங்களுக்கு நல்லது தானே என்றும் தெரிவித்தார்.

மேலும் 500 வாக்குகள் வைத்திருக்கும் மதிமுகவுடன் ,திமுக கூட்டணி வைத்திருக்கும் போது. நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு…என கூறிய அவர்,அம்மா ஆட்சி சூப்பர் ஆட்சி, எடப்பாடி ஆட்சி சூப்பரோ சூப்பரான ஆட்சி எனவும் அவர் தெரிவித்தார்..

மேலும் படிக்க