March 22, 2018
தண்டோரா குழு
அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஹர்திக் பாண்ட்யா அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்தார்.ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில்,மேவால் என்பவர் ஜோத்பூரில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில்,பாண்ட்யாவின் கருத்து அரசியலமைப்பை அவதிப்பதுடன், அலட்சியப்படுத்தும் நோக்குடன் இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.