வருமான வரித்துறை நடத்திய சோதனையின் தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி திங்கட் கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 7-ம் தேதியன்று, சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமிக்கு மீண்டும் ஆஜராக வருமானவரித்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக இருவரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்