• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை

April 7, 2017 தண்டோரா குழு

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.திமு.க. முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளிலும், எம்.எல்.ஏ., விடுதிகளிலும் வருமானவரித் துறை இன்று சோதனையில் இறங்கியுள்ளனர்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு டி.டி.வி. தினகரன் அணியினர் மீது பணபட்டுவாடா புகார் கடுமையாக எழுந்துள்ளது. இதன் காரணமாகவும், வரி ஏய்ப்பு புகார் காரனமகாவும் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று அதிகாலை முதலே வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தான் டி.டி.வி. தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவரது வீடு சோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.எல்.ஏ விடுதிகளில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் ரகசிய ஆவணங்களும், பணமும் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் கட்சியில்’ உள்ள அமைச்சர் வீட்டிலும், அதிகாரிகள் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ விடுதியில் நடைபெறும் இந்த சோதனையால் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க