• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிணமறுக்கும் இடத்தின் மந்திரியா? – அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி

May 14, 2019 தண்டோரா குழு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிணமறுக்கும் இடத்தின் மந்திரியா? என அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கமல் பிரச்சாரத்தின் போது எப்படி பேச வேண்டும் என தெரியாமல் பேசுகின்றார்.அமைச்சர் பதவியில் இருப்பவர் நாக்கை அறுத்துவிடுவோம் என்று பேசுவது சரியல்ல.கமலஹாசன் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் தவிர, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிணமறுக்கும் இடத்தின் மந்திரியா? தமிழகத்தின் மந்திரியா? எனவும் இதை பார்த்து விட்டும் முதல்வர் அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் லூசு பயலை, மந்திரி பதவிக்கு தகுதியில்லைன்னு சொல்லி கைது பண்ணிடவேண்டும்.அவர் நாளைக்கு முதல்வரை நாக்கறுப்பேன் என்று கூட சொல்லாம்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி எல்லாம் கிடையாது. பா.ஜ.கவின் ஜால்ரா என விமர்சித்த அவர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு ஸ்டாலின் ஏன் சந்திரசேகர ராவை சந்திக்கின்றார்.ஸ்டாலின் சந்திரசேகர்ராவ் சந்திப்பு குழப்பமான சந்திப்பாகவே நாங்கள் கருதுகின்றோம். நாக்கறுப்பேன் என்று பேசும் அமைச்சர் ராஜேந்திபாலாஜியின் கருத்தை ஏன் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கண்டிக்கவில்லை. ஜெ சாவில் மர்மம் என தெரிவிக்கும் ஓ.பி.எஸ், ஏன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை முதல்வர் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், தினகரனுக்கு பதில் சொல்வதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு மடடும் பதில் சொல்கிறார். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்.

முதல்வர் பதவி கொடுத்தது சசிகலாவா? இல்லையா? என்பதை முதல்வர் பழனிச்சாமி விளக்க வேண்டும். 23 ம் தேதி தேர்தல் முடிவிற்கு பின்னர் முதல்வர் எவ்வளவு பாலங்களில் என்ன மோசடி என்பது குறித்த பட்டியலை வெளியிடுவோம். அதனை தொடர்ந்து 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க