September 23, 2020
தண்டோரா குழு
அமைச்சர் செங்கோட்டையன் தவறாக வழிநடத்தப்படுகிறார் என அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் கூறியுள்ளார்.
திமுக வில் இணைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அம்மா வழியில் அதிமுக செல்லவில்லை.அமைச்சர் செங்கோட்டையன் செயல்பாடுகள் தொகுதியில் சொல்லும்படியாக இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் தவறாக வழிநடத்தப்படுகிறார். மேலும் பலர் அதிமுக வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்.
கூவத்தூர் களப்பணியில் என் பங்கு அதிகமாக இருந்தது.அம்மா மறைவிற்கு பிறகு சரியான தலைமை அதிமுக வில் இல்லை. கோபி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றியை உறுதியாக்குவேன் என்றார்.