• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் – கே.பி.முனுசாமி

April 24, 2017 தண்டோரா குழு

பேச்சுவார்த்தைக்கு வந்து விட்டால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது என்று ஒ.பன்னீர்செல்வம் அணி பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“ மறைந்த முதல்வர் ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடையவில்லை என தொண்டர்கள் கருதுகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு விட்டாரோ என தொண்டர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய முயற்சிக்கும் சசிகலா குடும்பத்தைச் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். ஆனால் எடப்பாடி அணியில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வந்து விட்டால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

எடப்பாடி அணியினர் பேசுவதற்கு தயார் எனக் கூறி அவர்களாகவே குழு அமைத்துக் கொண்டனர். ஆனால் தற்போது பேச்சுவார்த்தை குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்கின்றனர். அமைச்சர்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக குழப்பமான கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.”

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க