• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டி

March 31, 2019

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அதைப்போல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியான ஏ.கே. அந்தோணி அறிவித்துள்ளார்.இதனால் அவர் அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் போட்டியிட கே.எஸ்.அழகிரியும் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க