• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க கல்லூரியில் மாணவன் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

January 19, 2017 தண்டோரா குழு

வட மெக்ஸிகோவில் உள்ள அமெரிக்க கல்லூரியில் மாணவன் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஆஸ்கார் அபாய்டேஸ் கூறுகையில், “வட மெக்ஸிகோ மொன்ட்டேரே என்ற இடத்தில் இருக்கும் அமெரிக்க கல்லூரியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.

அக்கல்லூரியில் படித்து வரும் ஃபெட்ரிகோ குவேரா என்ற மாணவர் தன் சக மாணவர்கள் மீது திடீரஎன்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில் 3 பேர் உயிரிழந்தனர். பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். சம்பவம் அறிந்த காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் அக்கல்லூரிக்கு விரைந்தனர்” என்றார்.

நியூவோ லியோன் மாநில பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஆல்டோ பாஸ்கி கூறுகையில், “15 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியால் முதலில் 24 வயது ஆசிரியர், பிறகு 14 வயது மாணவி, 14 வயது மாணவன் தலையில் சுட்டதில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 15 வயது மற்றொரு மாணவன் கையில் சுட்டதால் காயமடைந்தான். பிறகு அதே துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டான். காயமடைந்த மாணவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க