• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில்”Scripps National Spelling Bee” போட்டியில் வென்ற இந்திய சிறுமி

June 3, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த 9௦வது “Scripps National Spelling Bee” போட்டியில் அமெரிக்க இந்திய வம்சவாளியான அனன்யா வினய் வெற்றி பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஆங்கில எழுத்து கூட்டல் போட்டியான ” Scripps National Spelling Bee” போட்டி நடைபெற்று வருவது வழக்கம்.

இவ்வாண்டிற்கான “Scripps National Spelling Bee” போட்டி , அமெரிக்க நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் “Gaylord National Resort and Convention Centre” நடைபெற்றது.

இந்த போட்டியில், அமெரிக்க இந்திய வம்சவாளியான அனன்யா வினய் மற்றொரு இந்திய மாணவரான ரோஹன் ராஜீவுக்கு எதிராக போட்டியிட்டார். இவருக்கும் இடையே பலத்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இறுதியில்,’Marocain’ (பட்டு அல்லது கம்பளியால் செய்யப்பட்ட துணி) என்ற வார்த்தைக்கு எழுத்து பிழை கண்டு பிடித்து, சரியான சொல்லை கூறி முதலிடம் பிடித்தார்.

ரோஹன் ராஜீவ் ‘மாறம்’ என்னும் வார்த்தையை சரியாக எழுத்துக் கூட்ட தவறியதால், இரண்டாம் இடத்தை பெற்றார். ‘மாறம்’ என்னும் வார்த்தைக்கு ‘கடல் புல்’ என்னும் அர்த்தத்தை குறிக்கும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனன்யாவுக்கு $40,000 (ரூ. 25.79 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. கோப்பையும் வழங்கப்பட்டது.

அனன்யா கூறுகையில்,“இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

“Scripps National Spelling Bee” அதிகாரப்பூர்வ ட்விட்டரில், “2௦17ம் ஆண்டு “Scripps National Spelling Bee”போட்டியில் வெற்றிபெற்ற அனன்யாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க