• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் தனது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் !

January 31, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்திற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால், அவரது உடல்நிலை முழுதாக சரியாகவில்லை. இதனால், கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்கா சென்று சில மாதங்களுக்குப் பிறகு திரும்பினார். விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் கட்சியை கவனித்துக்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். எனினும், அங்கிருந்த படியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய 29-ம் ஆண்டு திருமண விழாவையொட்டி அவர் குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க