• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமிதாப் பச்சன் போன்று ரஜினி மண்டையிலும் ஒன்றும் இல்லை – கட்ஜு

May 18, 2017 தண்டோரா குழு

அமிதாப் பச்சன் போன்று ரஜினி மண்டையிலும் ஒன்றும் இல்லை அவரை ஏன் அரசியலுக்கு கூப்பிடுகிறீர்கள் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார். இது சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,தமிழ்நாட்டு மக்கள் மேல் நல்ல மரியாதை வைத்திருந்தேன். ஆனால் ரஜினியை இப்ப அரசியலுக்கு அழைப்பதன் மூலம் அத கெடுத்துக்கிட்டு இருக்கீங்க.ஏன் தமிழ்நாட்டு மக்கள் இப்படி இருக்காங்கன்னு தெரியவில்லை.

நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, என் தமிழ் நண்பர்களுடன் சிவாஜி படத்துக்கு செல்வேன்.அப்போது படத்தில் சிவாஜியை முதலில் காட்டும் போது அவரது கால்களை காண்பிப்பர். அப்போது ரசிகர்கள் ஆர்பரித்து கத்துவார்கள்.அது போல இப்போது ரஜினியைப் பார்த்து ஆர்பரிக்கின்றனர். ஆனால் தற்போது ஒருபடி மேலே போய் அவரை அரசியலுக்கு வரவேண்டும் எனவும், தமிழகத்திற்கு முதலமைச்சராக வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.

அப்படி ரஜினி அரசியலுக்கு வர என்ன தகுதி அவரிடம் இருக்கின்றது. அவர் வறுமையில் வாடும் மக்களுக்கு ஏதேனும் தீர்வு வைத்துள்ளாரா?அல்லது வேலையில்லா திண்டாட்டம், ஊட்டச்சத்துக் குறைவு,சுகாதாரமின்மை, விவசாயிகள் துயரங்கள், போன்றவற்றை ஒழித்துக் கட்ட ஏதேனும் ஒரு யோசனை வைத்துள்ளாரா?மக்களின் அடிப்படை தேவை குறித்தும் எதுவும் அறியாத இவரை எப்படி அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என தெரியவில்லை.

இந்த விஷயத்தில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று தான் ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க