October 15, 2020
தண்டோரா குழு
கலாம் மக்கள் அறக்கட்டளை சார்பாக அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு திருநங்கை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவையில் மறைந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை நேரு நகர் அரிமா சங்கம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் உள்ள கலாம் அறக்கட்டளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதில் அறக்கட்டளையின் தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆணையாளர் பெரியசாமி,கோவை மாவட்ட அரிமா சங்க முதல் நிலை ஆளுநர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அங்கு வைக்கப்பட்டிருந்த கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பவித்ரா என்ற திருநங்கை ஒருவருக்கும் இலவச அரிசி முட்டைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரேஸ் கோர்ஸ். காவல்நலைய போக்குவது உதவி ஆய்வாளர் ராக்கி ராஜேஷ்,மற்றும் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், சுப்ரமணியம், யுவராஜ், செல்வராஜ்,ஸ்ரீஹரி,கிரீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.