• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அபிநந்தன் எப்போது பணிக்கு திரும்புவார் இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ் விளக்கம்

March 4, 2019 தண்டோரா குழு

அபிநந்தன் பூரண உடல் பெற்றுள்ளார் என்பதை மருத்துவர்கள் அறிக்கை அளித்த பின்னரே அவர் மீண்டும் விமானி பணிக்கு திரும்புவாரா என்பதை உறுதி செய்ய முடியும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அபிநந்தனின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் விமானங்களை இயக்குவது தொடர்பாக தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. பாகல்கோட்டில் நடைபெற்ற தாக்குதலின் போது நவீன ரக மிராஜ் வகை விமானங்களை பயன்படுத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் காலத்தில் எந்த விமானமாக இருந்தாலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே மிக்21 பைசன் ரக விமானத்தை அபிநந்தன் இயக்கினார். பைசன் ரக விமானம், அதிநவீன ரக ஆயுதங்களை தாங்கி செல்லவும், நவீன ரக ரேடார்கள் பொறுத்தப்பட்டும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படை பாகல்கோட் தாக்குதலின் போது குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பாக தாம் கருத்து கூற முடியாது. ஊடகங்களில் தாக்குதல் தொடர்பாக வரும் தகவல்கள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை.

தேஜஸ் விமானத்திற்கான தகுதிசான்று 2013″ல் கொடுக்கப்பட்டிருந்தாலும் தயாரிப்பு சான்று, இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு டிசம்பர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளது. 36 ரபேல் விமானங்கள், 40 தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்கள் ஆகியவை வரும் செப்டம்பர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். புதிய விமானங்களை சேர்க்கவும், பழைய ரக ஜாக்குவார், மிக் 21, மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்து விலக்கப்படும். இந்திய விமானப்படையில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக
உள்ளது. 13 ஆண்டுகள் பணி நிறைவிற்கு பிறகு அவர்கள் விரும்பினால் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்றார்.

விமான விபத்துக்களை அதிகரித்துள்ள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், விபத்துக்களை தவிர்க்க ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க