• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூர் அருகே பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 45 பேர் காயம்

September 25, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 45 பேர் பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அன்னூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக இன்று காலை,சத்தியமங்கலத்தில் இருந்து கோவை சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தும் , கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 45 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களையும் பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு பேருந்துகளிலும் பயணித்த 39 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் காவல் துறையினர் பேருந்துகளை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பொகளூர் என்ற இடத்தில் மேட்டுப்பாளையம் சென்ற அரசு பேருந்து மரத்தில் மோதியதில் 6 பேர் லேசான காயம் அடைந்தனர் அவர்களுக்கு அன்னூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 40 க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டதால் காயம் பட்டோர் அவதிக்குள்ளாகினர்.

மேலும் படிக்க