• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

January 28, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

2019 மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அதிக காலம் பணிசெய்யும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டி இருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யப்பட கூடாது. 2019 மே 31 அல்லது அதற்கு முன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்திருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க