• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் – எஸ்.வி.சேகர்

April 20, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துக்காக அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநரின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை கேட்டார்.அதற்கு அவர் அந்த பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் தட்டினார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதற்கிடையில்,பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் கேவலமான முறையில் எஸ் வி சேகர் ஒரு பேஸ்புக் பதிவை பார்வார்டு செய்திருந்தார்.இதற்கு பத்திரிகையாளர் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து,மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ்.வி.சேகர் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், முகநூலில் எனது நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன்.சற்று நேரத்தில் என் நண்பர் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார்.உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது.

அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக் கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை.மனவருத்தம் அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும் குடும்பத்திலிருந்து வருபவன் நான்.தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க