August 15, 2020
தண்டோரா குழு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என கோவையில் பெண்கள் இணைந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் பெண்கள் இணைந்து அதிக சி.சி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தை தங்களால் இயக்க முடியும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக இரு சக்கர வாகன பேரணி சென்றனர். ரைடர்ஸ் ஐகான் மற்றும் கியர் அப் இணைந்து பெண்களால் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதில் கொரோனா கால விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் அதிக சி்.சி.திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களை பெண்கள் ஓட்டியபடி ஊர்வலமாக சென்றனர்.
கோவை சாய்பாபா காலனியில் துவங்கி தடாகம்,கணுவாய் வழியாக ஆனைகட்டி வரை செல்லும் இந்த பேரணியில், பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று வராமல் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி செல்ல உள்ளதாக பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.