August 21, 2020
தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாலும்,சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு திட்டவட்டமாக அனுமதி மறுத்து விட்டது. ஆனால் தொடர்ந்து பாஜக மற்றும் இந்துக்கள் அனுமதி வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பாஜகவின் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ்குமார் கூறுகையில்,
தமிழக அரசு கூறும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. வெற்றியை கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்றும்,பக்ரீத் பண்டிகை கொண்டாடப் பட்டது போல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.