September 11, 2017
தண்டோரா குழு
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனிதாவின் குடும்பத்தினரை நடிகர் விஜய் இன்று நேரில் சென்று சந்தித்தார்.அப்போது அனிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி அனிதாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளார்.