• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது -ரஞ்சித்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரில் வைக்கப்பட்டுள்ள மாணவி அனிதாவின் உடலுக்கு இயக்குநர் ரஞ்சித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது.ஏழை மாணவர்களின் கல்வி கனவை பறிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. இது யாருக்கான அரசு, சமூக நீதிக்கு எதிரான அரசு தான் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். தமிழக அரசு ‘நீட்’ விவகாரத்தல் நேர்மையாக செயல்படவில்லை.நீட் நுழைவுத் தேர்வவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்,” என்றார்.

மேலும் படிக்க