• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவின் மரணம் தொடர்பாக கோவையில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் ரயில் நிலையைத்தை முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல அமைக்கள் இணைந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் கோவை ரயில்நிலைய சாலையில் போக்குவரத்து சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் கோவை வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க