• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு குதிரை பயணம் !

July 30, 2023 தண்டோரா குழு

Indigenous Horse Society – Tamilnadu என்பது உள்நாட்டு குதிரைகளை மேம்படுத்துதல்,பாதுகாத்தல் மற்றும் அங்கீகாரம் பெறுதல் ஆகியவற்றிற்கான ஓர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது 2019 ஆம் ஆண்டு முதல் முறையான அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது.

வரும் எதிர்கால தலைமுறையினர் உள்நாட்டு குதிரைகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக IHS – TN மற்றும் நிலா குதிரை பயிற்சி பள்ளி இணைந்து கன்னியாகுமரி முதல் அந்தியூர் வரை தொடர்ந்து பத்து நாட்கள் குதிரை சவாரி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த குதிரை சவாரி பயணமானது , 2000 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழம்பெரும் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெறுகிறது.இந்த பயணமானது கன்னியாகுமரியில் 28 ஜூலை 2023 அன்று தொடங்கி 8 ஆகஸ்ட் 2023 அன்று அந்தியூர் குருநாதசாமி கோவிலில் நிறைவடைய உள்ளது.

இந்தப் பயணத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்த குதிரை சவாரியில் ஈரோட்டில் அமைந்துள்ள நிலா குதிரை பயிற்சி பள்ளியை சேர்ந்த ஐந்து குதிரை வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

அவர்களின் பெயர் பட்டியல் :

பிரியதர்ஷினி ரங்கநாதன் வயது 32 ( 1 ) , சுபத்ரா வயது12 (2), மனவ் சுப்பிரமணியன் வயது 11 ( 3 ) , கௌதமன் மேவாணி வெற்றி கண்ணன் வயது 33 ( 4 ) , ஸ்வாதி விக்னேஸ்வரி வயது 32 ( 5 ) . இந்த ஐந்து வீரர்கள் செய்யும் குதிரை சவாரி பயணம் இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸில் இடம் பெற உள்ளது.

மேலும் படிக்க