• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் – பொருளாதார அறிஞர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

February 13, 2021 தண்டோரா குழு

புதிய பணம் அச்சடிப்பதால் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்து புதிய பொருட்களின் வரவு இல்லாமல் இருப்பதால், இரும்பு,ஸ்டீல்,உணவு பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாக பிரபல பொருளாதார அறிஞர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழ்நாடு ஜி.எஸ்.டி.வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பாக `”பொருளாதாரம் பேசலாம் தமிழா” எனும் தலைப்பில் நாட்டின் தற்போதை பொருளாதாரத்தின் நிலை குறித்த கருத்தரங்கம் தலைவர் முகமது அஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இழந்த பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும்,பொருளாதாரம் குறித்த புதிய கருத்தியல்களை உருவாக்குவது மற்றும் அதனை ஆட்சியாளர்களின் பரிசீலினைக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் நடைபெற்ற,இதில்,
வீட்டுக்கு கேடான மது வருவாய், ஏன் நாட்டுக்கு தேவை?ஜிஎஸ்டி- ஒரு நல்ல வரிமுறை நாசமாகப் படுகிறது,பொதுத் துறையை தனியாருக்கு விட்டுக் கொடுப்பது சரியா? தவறா?, பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் கனவா? நனவா?,உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிரபல பொருளாதார நிபுணர்கள் கோபாலகிருஷ்ண ராஜு ரத்தினவேல், ஆனந்த் ஸ்ரீனிவாசன், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, சந்திரபால், பாண்டியன், பாஸ்கர் ராவ், ராஜேஷ்குமார், உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள் கருத்துரையாற்றினார்.

இதில் பேசிய பொருளாதார அறிஞர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்,

தற்போது இரும்பு,ஸ்டீல் மற்றும் அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலையேற்றத்திற்கு ரிசர்வு வங்கியே காரணம் என கூறிய அவர்,கடந்த வருடம் 13 இலட்சம் கோடி கடன் பெற்றுள்ளதாகவும்,கடந்த வாரம் 20,000 கோடி புதிதாக பணம் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட்டிற்கு பிறகு கூட இரண்டு மாதத்தில் மேலும் 80,000 கோடி ரூபாய் புதிதாக அச்சடிக்கப்படும் என கூறியதை சுட்டிகாட்டிய அவர்,புதிய பணம் அச்சடிப்பதால் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்து புதிய பொருட்களின் வரவு இல்லாமல் இருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே 12 இலட்சம் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசே ஒப்புகொண்டுள்ளதையும் அவர் சுட்டி காட்டினார்.

மேலும் படிக்க