“வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல” என்று ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ ஒன்று நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து எம்.எல்.ஏ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
“தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல. நான் முன்பு எப்போதோ அளித்த பேட்டியில் குரலை மட்டும் மாற்றி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். பேரம் பேசியதாக வெளியான அந்த வீடியோவில் உண்மை இல்லை.
கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு குறித்து நான் பேசவில்லை. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக வழக்கு தொடர்வேன்” என்றார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்